தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் தமிழ் ரசிகர்களால் ஹீரோவாக ஏற்கப்பட்டு கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார்.
தற்போது ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் குணசித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சரத்குமாருக்கு சமீபத்தில் குரானா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரத்குமார் தன்னை வைத்து 13 படங்கள் தயாரித்த தயாரிப்பாளரே என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்கள் மற்றும் புதுமுக நடிகைகளுக்கு பல வெற்றிப்படங்களை தேடிக் கொடுத்த தயாரிப்பாளர் யார் என்று கேட்டால் அனைவரும் கை காட்டும் ஒருவர் ஆர்பி சௌத்ரி தான். தன்னுடைய சூப்பர் ஹிட் பிலிம்ஸ் மூலம் பல பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்.
ஆர்பி சௌத்ரி மற்றும் சரத்குமார் கூட்டணியில் கிட்டத்தட்ட 13 படங்கள் வெளிவந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சரத்குமார் நடித்துள்ளார். மேலும் சரத்குமார் சினிமாவில் இந்த அளவுக்கு உயருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சௌத்ரி படங்களில் நடித்தது தான் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நாட்டாமை, சிம்ம ராசி, சேரன் பாண்டியன், சூரியவம்சம், மாயி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இவை அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.