நடிப்பு அசுரன் என தனது பெயரை மாற்றிக் கொண்டவர் நடிகர் தனுஷ். ஆரம்பகாலத்தில்
வெற்றிக்காகப் போராடி வந்த தனுஷ் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்த பிறகு முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.
சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் போன்ற பலருக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ் அந்த ஒரு நடிகருக்கு மட்டும் ஏன் பல ஆண்டுகளாக வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தமிழில் பல படங்களில் நடித்துள்ள தனுஷ் இதுவரைக்கும் நடிகர் வடிவேலுவுடன் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் படிக்காதவன் படத்தில் விவேக்கிற்கு பதிலாக வடிவேலுவுடன் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.
பின்பு ஏதோ ஒரு காரணத்தால் வடிவேலு படத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார். பிறகு வேறு வழியின்றி அந்த கதாபாத்திரத்திற்கு விவேக் நடிக்க வைத்தனர். படம் வெளிவந்த பிறகு விவேக்கின் கதாபாத்திரமும், நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
தமிழ் சினிமாவின் பல ரசிகர்கள் வைத்திருக்கும் தனுஷ் மற்றும் வடிவேலு ஏன் இன்றுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது பலருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது. தற்போது வடிவேலு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதால் இன்னும் ஒரு சில வருடங்கள் கழித்தாவது தனுசுடன் வடிவேலு ஏதாவது ஒரு படத்தில் நடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.