ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அக்கா அண்ணி போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் பேசும் சம்பளம் மலையை விட பெரிதாக உள்ளதாம்.
தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் அந்த நடிகை. அந்த சிரிப்புக்கு சில்லறையை விட்டெறிந்த ரசிகர்கள் ஏராளம். அது மட்டுமில்லாமல் பல நடிகர்களும் அந்த நடிகையுடன் நடிக்க போட்டி போட்டனர்.
பாக்க ஹோம்லியாக இருந்தாலும் தன்னுடைய பார்வையாலேயே பார்ப்பவர்களுக்கு போதையேற்றும் திறமை கொண்ட இந்த நடிகைக்கு அன்றைய காலகட்ட சினிமாவே அடிமையாக இருந்ததாம். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
பின்னர் மார்க்கெட் இல்லாத நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த அந்த நடிகை மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து கொண்டிருக்கிறார்.
இதனால் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். சினிமா வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன. அப்படி விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசி வருகிறாராம்.
சினிமாவில் ஒரு நாளுக்கு 10 லட்சம் வரை சம்பளம் பேசுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெரிந்த முகமாச்சே என வாய்ப்பு கொடுத்தால் அநியாயத்திற்கு சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பாளர்கள் பின்வாங்க ஆரம்பித்து விட்டார்களாம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டால் இஷ்டம்னா கொடு, இல்லையென்றால் வந்தவழியே கிளம்பி விடு என அராஜகம் செய்கிறாராம் 39 வயது நடிகை.