சினிமாவை பொருத்தவரை போட்டி, பொறாமை வருவது சகஜம். நண்பர்களாக இருந்தவர்கள் பிறகு எதிரிகளாக மாறுவது இந்திய சினிமாவை பொறுத்தவரை காலம் காலமாக நடந்து கொண்டுதான் வருகிறது.
ஒரு சிலர் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள் ஆனால் மற்றவர்கள் அந்த பிரச்சனைக்கு காரணம் யாரோ அவரை வைத்தே அந்த பிரச்சினைக்கும் பதிலடி கொடுப்பார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இணை பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள் டிஎம் சௌந்தராஜன் மற்றும் கண்ணதாசன். இவர்களது கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து இவர்களை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
ஆனால் பேட்டி ஒன்றில் டிஎம் சௌந்தரராஜன் நான் பாடுவதால் தான் பாட்டு எல்லாம் ஹிட்டாகிறது கண்ணதாசன் எழுதுவதால் கிடையாது என கூறியுள்ளார்.
அதனைக் கேட்ட கண்ணதாசன் சும்மா இருப்பாரா டி எம் சௌந்தரராஜன் வைத்து திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைத்தேனே” என டிஎம்எஸ் சௌந்தராஜன் குறிக்கும் வகையில் அந்த பாடலை அவரை வைத்து பாட வைத்தாராம்.
அதாவது உன்னை பாட வைத்தது நான்தான் எனும் வகையில் பதிலடி கொடுத்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒரு சில பாடல்கள் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.