இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஷ்ரேயா கோஷல். 36 வயதாகும் ஸ்ரேயா கோஷால் தற்போது கருவுற்றிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் பேவரைட் பெண் பாடகர் என்றால் அது ஸ்ரேயா கோஷல் தான். டி இமான் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்றோர் தாங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு பாடலாவது பாட வைத்து விடுவார்கள்.
ஸ்ரேயா கோஷல் நடிகைகளைப் போலவே மாடலிங் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். அவ்வப்போது மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவார்.
வயது 36 ஆனாலும் இன்னும் பார்ப்பதற்கு இளம் பெண் போல் தோற்றமளிக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணமானதே நிறைய பேருக்கு தெரியாது. ஸ்ரேயா கோஷல் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையில் இருந்த ஷ்ரேயா கோஷால் தற்போது முதல் முறையாக கருவுற்றிருக்கும் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஸ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.