தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி இயக்குனராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலும் முக்கியமாக கிராமத்து கலாச்சாரத்தில் இயக்கிய நாட்டாமை, முத்து, படையப்பா போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் இயக்கிய படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்துவர் தான் சேரன். புரியாத புதிர் முதல் நாட்டாமை வரை கிட்டத்தட்ட 10 படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்துள்ளார் சேரன்.
இயக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்டுள்ள சேரனுக்கும், கேஎஸ் ரவிக்குமாரக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டிருந்தன. படப்பிடிப்பு தளத்தில் கே எஸ் ரவிக்குமார் எடுக்கும் காட்சிகளின் தவறுகளை மற்றும் திருத்தங்களை சுட்டி காமித்து விடுவாராம் சேரன்.
ஆனால் கே எஸ் ரவிக்குமார் இதை ஏற்கமாட்டாராம், இதனால் சண்டை பெரிதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விடுவாராம் சேரன். இப்படி பலமுறை சண்டை போட்டுள்ளார், ஆனால் மீண்டும் வறுமையின் காரணமாக கே எஸ் ரவிக்குமாரை சந்தித்து வாய்ப்பு கேட்பாராம்.
ஒரு காலகட்டத்தில் தான் இயக்குனராக வேண்டும் அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி கண்டார் சேரன். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிப்பிலும் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்வு செய்து வெற்றி பெற்றவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற தமிழ் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் பாராட்டித்தான் வருகின்றனர். இப்படி துணை இயக்குனராக பல அடியை வாங்கி சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சேரன்.