சினிமாவைப் பொருத்தவரை திறமை இருப்பதை விட பிரபலமாக இருப்பது தான் ரொம்ப முக்கியம் ஏனென்றால் பிரபலத்தை வைத்து தான் பல நடிகர்களுக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. பிரபலத்தை வைத்து தான் பல நடிகர்களுக்கும் தற்போது திறமைக்கான அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருபவர் டி எம் கார்த்திக் ஸ்ரீனிவாசன். முதலில் அபிஷேக் பச்சான் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான குரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் சர்வம் என்ற படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்.
அதன் பிறகு மதராசப் பட்டினத்தில் பெயிண்டர் ஆகவும், தெய்வத்திருமகள் படத்தில் கிருஷ்ணாவிற்கு ஃப்ரண்ட் ஆகவும் நடித்திருப்பார். விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் இலியானாவிற்கு ஜோடியாக ப்ரைஸ் டாக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
நண்பன் படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு ராஜா ராணியில் நஸ்ரியாவிற்கு காதலராக பூஷன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல படங்களில் நடித்துள்ள இவர் நண்பன் படம் வெளியாகிய அதே n2012ம் ஆண்டு லைஃப் ஆஃப் பை படத்தில் சயின்ஸ் வாத்தியாராக நடித்துள்ளார்.
இப்படம் பெஸ்ட் பிக்சர், பெஸ்ட் டைரக்டர் மற்றும் பெஸ்ட் ஸ்கிரீன்பிளே போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளது. அந்த வகையில் குரு படத்தில் நடித்த டி எம் கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கேரக்டர் விட படத்தில் நடித்த அனைவரைப் பற்றியும் ரசிகர்கள் கேட்டுள்ளனர், இதனால் மனமுடைந்து போனார்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் இல்லையென்றால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. அதேபோல் ஏதாவது ஒரு கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெயர் பெற்று விட்டாள் மற்ற இயக்குனர்கள் அனைவரும் அதே கதாபாத்திரத்திற்கு தான் அந்த நடிகரை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார் கார்த்திக் ஸ்ரீனிவாசன், இவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்திலுமே வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளையாகவே நடித்திருப்பார். இவர் சரளமாக இங்கிலீஷ் பேசக்கூடியவர் என்பதால் பல இயக்குனர்களும் இவரை வெளிநாட்டு மாப்பிள்ளை போன்ற கதாபாத்திரத்திற்கு தான் பயன்படுத்திக் கொள்வார்கள்.