தமிழ் சினிமாவில் அவ்வப்போது புதுப்புது கதைகளை கொண்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன. அதிலும் சில படங்கள் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல் அந்தப் படங்கள் ஹிட் படங்கள் ஆவதோடு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரிலீசாகி ஹிட்டடித்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ:
நடுநிசி நாய்கள்: கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி, ஹிட்டடித்த படம்தான் நடுநிசி நாய்கள். இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்தப்படத்தில் வீர பாகு, சமீரா, சமந்தா, அஸ்வின் ககுமனு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாம்.
ரத்த சரித்திரம்: 2010-ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளியான படம் தான் ரத்தசரித்திரம். இந்தப் படத்தை சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா இயக்கியிருந்தார். அரசியலை மையமாகக் கொண்ட இந்தப் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாம்.
கழுகு: 2012 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் காமெடி படம்தான் கழுகு. இந்தப் படத்தை சத்திய சிவா என்னும் அறிமுகம் இயக்குனர் இயக்கி இருந்தார்.
வழக்கு எண் 18/ 9: பாலாஜி சக்திவேலின் மாறுபட்ட இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம்தான் வழக்கு எண் 18/ 9. இந்தப் படம் கடந்த 2012ஆம் ஆண்டு ரிலீஸானது.
விசாரணை: 2015ஆம் ஆண்டு ரிலீஸான க்ரைம் திரில்லர் திரைப்படம் தான் விசாரணை. இந்தப் படம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக கருதப்படும் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.