திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தொழிலதிபரை வளைத்துப் போட்ட 23 வயது இளம் நடிகை.. ராத்திரியானா இன்பச் சுற்றுலா தான்!

நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது ஒன்றும் சினிமாவில் புதிதல்ல. ஆனால் தற்போது இளம் நடிகைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களை குறி வைப்பது தான் புரியாத புதிராக உள்ளதாம்.

முன்னரெல்லாம் சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள்தான் தங்களுடைய வசதிக்கேற்ப ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள். ஆனால் சமீபகாலமாக இளம் நடிகைகள் திருமணம் செய்யாமலேயே தொழிலதிபர்களுடன் டேட்டிங் செய்து வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான 23 வயது நடிகை ஒருவர் சமீபகாலமாக தொழிலதிபருடன் இரவு நேரங்களில் அதிகமாக சுற்றி வரும் செய்தி அக்கட தேச ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் அந்த சீக்கிர நடிகருக்கு ஜோடியாக ஒரு குடும்பப் பாங்கான திரைப்படத்தில் நடித்தவர் தான் அந்த நடிகை. அதற்கு முன்னரே ஒரு சைக்கோ இயக்குனர் படத்தில் உயர்ந்த நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நடிகை சமீபத்தில் ஒரு இயக்குனரை காதலிப்பதாக வதந்திகள் வெளியானது.

ஆனால் அதில் உண்மை இல்லையாம். அதற்கு காரணம் சமீப காலமாக அந்த இளம் நடிகையை ஒரு தொழிலதிபருடன் இரவு நேரங்களில் ஹோட்டல், பார்க், பீச் என பொழுதை கழித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் அடிக்கடி இருவரும் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று விடுகிறார்களாம்.

நாளுக்கு நாள் அந்த நடிகையைப் பற்றிய செய்திகள் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பரவுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அந்த நடிகை உண்மையில் இந்த வேலையை செய்கிறாரா? அல்லது வேண்டுமென்றே தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்பி விடுகிறாரா? எனப் புரியாமல் விழிக்கிறார்கள் சினிமா வாசிகள்.

Trending News