திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

25 நாளில் 100 கோடி வசூலித்த விஜய் சேதுபதி படம்.. ருத்ர தாண்டவமாடும் பவானி!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி சமீபகாலமாக மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலிருந்து அதிகமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கிட்டதட்ட பத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதில் நான்கு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் சூரிக்கு தந்தை வேடத்தில் நடித்து வருகிறாராம். மேலும் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்த உப்பெண்ணா என்ற தெலுங்கு படம் வெளியான 25 நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் அந்த படத்தில் நடித்த நடிகர் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவருக்குமே இது முதல் படம்.

uppenna-100cr-collection
uppenna-100cr-collection

முன்னதாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகர்களின் படங்களின் வசூலை இந்த படம் ஓரங்கட்டிவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ஷேர் இதுவரை இல்லாத அளவுக்கு கொட்டிக் குவித்துக் கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனம் உற்சாகத்தில் உள்ளது.

என்னதான் இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் இருந்தாலும் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ஹீரோயின் தந்தையாக ராயணம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தது தான் இந்த படத்திற்கு பலம் என படத்தின் இயக்குனரே குறிப்பிட்டுள்ளார்.

Trending News