
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெம்பர் ஒன் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ரஜினி ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அப்பேர்ப்பட்ட மார்க்கெட்டை கொண்ட ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரு நடிகை இருக்கிறார் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றுதான். சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே ரஜினியின் மார்க்கெட் தாறுமாறாக இருந்தது.
வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர். அதுமட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக வந்த அனைவரையும் தன்னுடைய அசுர வளர்ச்சியால் மிரள வைத்தார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் 1978ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது. இளையராஜா இசை அமைத்த இந்த படத்தை ஸ்ரீதர் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் நாயகியாக ஜெயசித்ரா என்பவர் நடித்தார். இந்த படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் 75,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அவரைவிட 25,000 அதிகமாக வாங்கினாராம் ஜெயசித்ரா. அப்போதே அவருக்கு ஒரு லட்சம் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அப்போதே இந்த செய்தி பல பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை என அப்போதே மிகப் பெரிய புகழை பெற்றார் ஜெயசித்ரா.