கோலிவுட்டில் ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று கூப்பிடும் அளவிற்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அதே போல் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்ததோடு, ரசிகர்கள் இவர் மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டு இருக்கின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டியது.
ஏனென்றால் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தால் கூட மாஸ்டர் திரைப்படம் கோடிகளில் வசூல் வேட்டை நடத்தி சாதனை புரிந்தது.
அதேபோல் நடிகர் விஜய் அடுத்ததாக தனது 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்ற தகவலும் நாம் அறிந்ததே.
மேலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் எகிறி உள்ளதால் விஜய்யின் சம்பளமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் நடிகர் விஜய் இறுதியாக நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது தான் காரணமாம்.
இதனால் பிகில் படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற விஜய், மாஸ்டர் படத்தில் முப்பது கோடி ரூபாய் சேர்த்து 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். தற்போது விஜய் தனது 65வது படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
மறுபுறம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் சூப்பர்ஸ்டார் இறுதியாக நடித்த தர்பார் படம் எதிர்பார்த்த வசூல் இல்லாததால் தனது சம்பளத்தை 100 கோடி ரூபாயிலிருந்து குறைத்துக் கொண்டாராம் ரஜினி.
இதைத்தவிர கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் இந்த சம்பள குறைப்பு நடைபெற்று உள்ளதாக சூப்பர் ஸ்டார் வட்டாரம் தெரிவிக்கின்றது. இதனால் ‘அண்ணாத்த’ படத்திற்கு தர்பார் படத்துக்கு வாங்கிய சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை தான் ரஜினி வாங்கி உள்ளாராம்.
இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரஜினி ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.