இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக ரசிகர்களை கவரும் வகையில் படம் எடுக்கத் தவறிவிட்டார். இதன் காரணமாக முருகதாஸுக்கு படவாய்ப்புகள் கொடுக்க முன்னணி நடிகர்கள் தயங்கி வருகின்றனர்.
கடைசியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார். ரஜினி நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் பெரிய அளவு சோபிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக வினியோகஸ்தகர்கள் ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் வீட்டை நோக்கி நஷ்ட ஈடு கேட்டு படையெடுத்தனர்.
இந்த பிரச்சனைக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் உடன் இணைந்து தளபதி 65 படத்தில் பணியாற்ற போவதாக செய்திகள் வெளிவந்தது. அதை ஒரு பேட்டியில் கூட முருகதாஸ் சூசகமாக கூறியிருந்தார்.
ஆனால் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு பிடிக்கவில்லை. இதனால் விஜய் முருகதாஸை கழட்டிவிட்டு இளம் இயக்குனருடன் கைகோத்தார். முன்னணி இயக்குனராக இருக்கும் முருகதாஸுக்கு இது பெரிய அவமானமாக இருந்ததாது. இதனால் எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதை சிவகார்த்திகேயன் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது தற்போது வரை அப்படி ஒரு ஆஃபர் வரவில்லை எனவும், அப்படி கிடைத்தால் கண்டிப்பாக பணியாற்றுவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். தற்போதைக்கு முருகதாஸ் நடிகர் விஷாலிடம் தஞ்சமடைந்துள்ளார்.
விரைவில் முருகதாஸ் மற்றும் விஷால் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனால் இந்த செய்தியும் வதந்தியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம். ஏற்கனவே தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் முருகதாஸ் மற்றும் விஷால் இருவரும் இணைந்தால் அந்த படத்திற்கு சுத்தமாக எதிர்பார்ப்பு இருக்காது என்பதால் பெரும்பாலும் இந்த படம் நடக்க வாய்ப்பே இல்லையாம்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!