விக்ரம் நீண்ட நாட்களாகவே ஒரு வெற்றி கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது கண்டிப்பாக தனது வெற்றி கிடைக்குமென நம்பி அவர் உழைத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் கோப்ரா.
7 கெட்டப்புகளில் தாறுமாறாக உருவாகி வரும் இந்தப் படத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்கிறார். மேலும் லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து சீயான் 60 என்ற படத்தில் பணியாற்ற உள்ளனர்.
ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார். முன்னதாக படத்தின் அறிவிப்பு வெளியானபோது சீயான் 60 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற போஸ்டருடன் வெளியானது.
ஆனால் தற்போது அனிருத்தை நீக்கிவிட்டது படக்குழு. இதற்கான காரணம் என்ன என்பதை சொல்லாமல் உள்ளதால் பலரும் காது, மூக்கு, வாய் வைத்து பேச ஆரம்பித்துவிட்டனர். அனிருத்துக்கு பதிலாக தற்போது சந்தோஷ் நாராயணன் சீயான் 60 படத்தில் பணியாற்ற உள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் பெரும்பாலும் சந்தோஷ் நாராயணன்தான் இசை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இடையில் பேட்ட படத்தில் மட்டுமே அனிருத் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்பராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பலமாக இருக்கும் என்பதை அறிந்து தற்போது தயாரிப்பாளரிடம் கூறி இசை அமைப்பாளரை மாற்றி விட்டார்களாம்.
மேலும் அனிருத் தற்போது பல படங்களில் பணியாற்றி வருவதால் குறித்த நேரத்தில் அவரால் பாடல் கொடுக்க முடியாது எனவும், அதன் காரணமாகவே இசையமைப்பாளரை மாற்றியதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.