தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போதுதான் முதல் முறையாக பிரபல நடிகை ஒருவர் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
சீயான் விக்ரம் கோப்ரா படத்திற்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சீயான்60 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனது மகன் துருவ் விக்ரம் உடன் சேர்ந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.
முதலில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது அவரை மாற்றிவிட்டு கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷ் நாராயணனை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டதை படத்திற்கு பலமாக கருதுகின்றனர்.
இந்நிலையில் முதல்முறையாக தமிழில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளாராம். சிம்ரன் ஏற்கனவே விக்ரம் மற்றும் சூர்யா நடித்த பிதாமகன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இதுவரை விக்ரமுக்கு ஜோடியாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
துருவ நட்சத்திரம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறினர். ஆனால் தற்போது வரை துருவ நட்சத்திரம் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏற்கனவே பேட்ட படத்தில் நடித்திருந்த சிம்ரன் தற்போது சீயான் 60 படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படம் வெளிவந்தால் மட்டுமே யாருக்கு யார் ஜோடி என்பது தெரியவரும். பெரும்பாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.