ஒரு காலத்தில் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மை டியர் பூதம் மற்றும் பெப்சி உமா. இப்போது கூட இந்த இரண்டு நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்பினால் உடனே போய் உட்கார்ந்து கொள்ளும் அளவிற்கு பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளது இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்.
அன்றைய காலத்தில் பெப்சி உமா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதற்கு காரணம் கொஞ்சி கொஞ்சி பேசும் உமாவின் பேச்சு தான். கிட்டத்தட்ட உமாவிற்கு ஆகவே 18 வருடங்கள் பிரபலமாக ஒளிபரப்பானது.
பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான பெப்சி உமா நிகழ்ச்சியை பற்றி தற்போது பேசினால் கூட அனைவருக்கும் ஞாபகம் வந்து விடும் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
பிரபலமாக இருந்த காலத்தில் பெப்ஸி உமாவிற்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்த்துள்ளார். ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கூப்பிட்டு உள்ளனர் அதையும் நிராகரித்துள்ளார்.
மேலும் சச்சின்வுடன் பெப்சி விளம்பரத்தில் நடிக்கவும் கூப்பிட்டு உள்ளனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த வாய்ப்பையும் தவிர்த்துள்ளார். இவ்வளவு ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் கூட நடிப்பதற்கு அன்றைய காலத்தில் அழைப்பு வந்துள்ளது அதையும் கூட இவர் மறுத்துள்ளார்.
இந்த மாதிரி பெப்ஸி உமாவிற்கு ஏராளமான சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இத்தனை வாய்ப்புகள் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.