தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படமும் குறித்த நேரத்தில் வெளியாகாமல் கொஞ்சம் தடுமாறித்தான் வெளியானது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் அடுத்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே மாஸ்டர் பிளான் போட்டு வைத்துள்ளாராம் விஜய். அந்தவகையில் 2022ஆம் ஆண்டு விஜய் கேரியரில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட உள்ளதாம்.
விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளனர். தற்போது ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் நெல்சன்.
அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்திற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் விஜய். அதுவும் கைகூடி வந்தால் தளபதி 65 படம் முடிந்த உடனேயே அந்தப் படத்தையும் தொடங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்திற்கும் இப்போதே பேச்சுவார்த்தை விஜய் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் குறைந்தது மூன்று படங்களாவது வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி65 படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தொடர்ந்து தளபதி 66 சம்மர் ரிலீசை குறி வைத்துள்ளது. மேலும் தளபதி 67 திரைப்படம் 2022 தீபாவளி வெளியீடாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
அந்தவகையில் பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடைவேளை விழுந்து விட்டதால் அடுத்தடுத்த படங்களை விரைவில் முடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் தளபதி விஜய். மேலும் ஒரே வருடத்தில் மூன்று படங்கள் வெளியானால் தற்போது இருக்கும் விஜய்யின் மார்க்கெட்டுக்கு குறைந்தது 600 கோடிக்கு மேல் வசூல் வரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.