தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பல படங்கள் பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முதல் படம் முனி. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்குனராக தெலுங்கில் மாஸ், டான் மற்றும் ரபெல் போன்ற படங்களை இயக்கினார்.
ஆனால் தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முனி மட்டும்தான். அதனால் ராகவா லாரன்ஸ் இப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் என அடுக்கடுக்காக பல பாகங்களை இயக்கினார்.
ராகவா லாரன்ஸ் அவரது ஹிட் படமான முனி படத்தில் அனைத்து பாகங்களிலும் இந்து , கிறிஸ்துவ, முஸ்லீம் என மூன்று மதத்தையும் காட்டியிருப்பார். அதாவது காஞ்சனாவின் முதல் பாகத்தில் ராகவா லாரன்ஸ் பேய் பிடித்திருக்கும் அப்போது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் அந்த பேயை ஓட்டுவார்.
அடுத்ததாக காஞ்சனா இரண்டாம் பாகத்தில் அதேபோல் ராகவா லாரன்ஸ்க்கு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பாதர் பேய் ஓட்டுவார். காஞ்சனா மூன்றாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹிந்து கடவுளை காட்டியிருப்பார்.
இதை வைத்து பார்க்கும்போது ராகவா லாரன்ஸ் தனது படங்களில் எம்மதமும் சம்மதம் என்பதை மையப்படுத்தியே காட்டியிருப்பார். அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸின் படங்களில் ஊனமுற்றோர் மற்றும் திருநங்கை பெருமைபடுத்தும் வகையிலும் காட்சிகள் அமைத்திருப்பார்.