தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பட வாய்ப்புகளுக்கு வேட்டை நடத்தி வருகிறார்.
ஒரு இருபது வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமா என்றால் அந்த நடிகைதான் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம். வடக்கிலிருந்து வந்து தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகளில் இவரும் ஒருவர்.
இடுப்புக்கு பெயர் போன அந்த நடிகை மார்க்கெட் இல்லாத சமயத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார். தற்போது பழைய நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்பதால், நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என அவரும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
உச்ச நட்சத்திரத்துடன் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லையாம். இந்நிலையில் ஏற்கனவே சினிமா ரசிகர்களால் ஒதுக்கப்பட்டு தட்டுத்தடுமாறி ரீ-என்ட்ரி கொடுக்க முட்டி மோதிக் கொண்டிருக்கும் 47 வயது நடிகரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறாராம் நடிகை.
நானே ரீ-என்ட்ரி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன், இந்த நேரத்துல நீங்க வேற என்ன படுத்தி எடுக்குறீங்க என வேண்டா வெறுப்பாக அந்த நடிகையை அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டாராம் அந்த நடிகர். நடிகருக்கு ஏற்றவாறு சம்பளத்தை மாற்றி கொள்கிறாராம் நாயகி.
தனக்கு நன்றாகத் தெரிந்த நடிகர்கள் என்றால் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறாராம். இப்போதைக்கு வாய்ப்பு கிடைத்தால் சரி என வலையை வீசியுள்ளார் அந்த நடிகை. வயதானாலும் கும்முனு இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் வயதான தோற்றம் இந்த நடிகை மூஞ்சியில் அப்பட்டமாக தெரிவதால் தயாரிப்பாளர்களும் சமீபகாலமாக சீண்டுவதில்லையாம்.
சமீபத்தில் கூட முன்னணி நடிகர் ஒருவரின் இசை வெளியீட்டு விழாவில் அந்த நாயகி குத்தாட்டம் போட்டார். ஆனால் அந்த நடிகரோ, ஆட்டம் போடுவதோடு சரி, அப்பாயின்ட்மென்ட் கேட்டு வீட்டுபக்கமெல்லாம் வரக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லி அனுப்பிவிட்டாராம்.