பாகுபலி, சாஹோ போன்ற படங்களுக்குப் பிறகு அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஆதிபுருஷ். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
சமீபகாலமாக பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்துமே வரம்புக்கு மீறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆதி புருஷ் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ராதே ஷ்யாம், சலார் போன்ற படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இதில் ஒரு படம் சொதப்பினாலும் தயாரிப்பாளர் பெரிய அளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். இருந்தாலும் பிரபாசை நம்பி தைரியமாக பணத்தை அள்ளி கொட்டி வருகின்றனர். சமீபத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியான சாஹோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் பிரபாஸ் படங்களை ஐந்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருவதால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற வகையில் ஹிந்தி நடிகைகளாக பார்த்து தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.
தற்போது ஆதிபுருஷ் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை கீர்த்தி சனோன் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். ராமாயணம் கதை என்பதால் சீதா கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஆதி புருஸ் திரைப்படம் பிரபாஸின் சினிமா கேரியரை ஹாலிவுட் லெவலுக்கு எடுத்து செல்லுமென பெரிதும் நம்பி கொண்டிருக்கிறாராம்.