90களில் தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த குழந்தை நட்சத்திரம் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது,
ஜிம்னாஸ்டிக், ஃபைட், சிலம்பம், டான்ஸ், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங், ஹாஸ் ரைடிங், சிங்கிங், பரதநாட்டியம், வெஸ்டர்ன் என இவருடைய தனது தனித் திறமையையும் வெளிக் காட்டியதால், இவருக்கு இருமுறை சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும், நந்தி விருதும் கிடைத்தது.
அதிலும் குறிப்பாக பிரபல முன்னணி இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் தொடர்ந்து 16 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு தந்ததாகவும், அவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் மகேந்திரனுக்கு ஏதாவது ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருப்பாராம்.
அப்படிப்பட்ட மகேந்திரனுக்கு, தன்னுடைய 14 வயதுக்கு மேல் என்ன செய்வது என்பது தெரியாமல் வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அழுதுகொண்டே அலைந்த காலமும் உண்டாம்.
அதன் பின்புதான் மகேந்திரன், 2013 ஆண்டு கதாநாயகனாக ‘விழா’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு இவருக்குக் கிடைத்த மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதியின் குட்டி பவானி என்ற கதாபாத்திரம் தான், சினிமா உலகையே இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இவருக்காகவே மாஸ்டர் படத்தை இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் அளவுக்கு மகேந்திரனின் நடிப்பு வெளிப்பட்டிருப்பதால், தற்போது இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறதாம்.