தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக வேண்டும் பல தயாரிப்பாளர்களின் அலுவலகத்தை நாடிச் செல்வார்கள் அப்படி சென்றவர்கள் தான் ஜெயலலிதா மற்றொரு பிரபல நடிகை. அந்த பிரபலம் யார் எப்படி சினிமாவில் சாதித்தார் என்பதைப்பற்றி பார்ப்போம்.
வெண்ணிற ஆடை படத்திற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. அப்போதுதான் ஜெயலலிதா மற்றும் ஹேமாமாலினி இருவரும் வந்துள்ளனர்.
ஆனால் அந்தத் நேர்முகத்தேர்வில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமும் இது தான். ஆனால் ஹேமமாலினி நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதன் பிறகு பல படங்களில் ஹேமாமாலினி தனது நடிப்புத் திறமை மூலம் பல ரசிகர்களையும் கட்டிப்போட்டார். அதுமட்டுமில்லாமல் இவருக்காகவே ஒரு சில ரசிகர்கள் அன்றைய காலத்தில் இருந்தனர். அதன்பின்பு இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கி வந்தார்.
1970ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை இவருடைய காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
பின்பு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாகவும் சினிமாவில் வலம் வந்தார். தற்போது வரை பல நடிகைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு தோல்வியை எப்படி வெற்றிகரமாக கையாளுவது என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இந்திய சினிமாவில் விளங்குகிறார்.