கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயற்கை படம் வசூல் ரீதியாக சாதனை புரியாவிட்டாலும், அந்தப் படத்தின் இயக்குனரான ஜனநாதனுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. அதேபோல், ஜனநாதன் முதன் முதலில் தயாரித்த படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்பது கூடுதல் தகவல்.
மேலும் 61 வயதான ஜனநாதன் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) இதய நோய் பிரச்சனை காரணமாக காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இப்படி ஒரு நிலையில் எஸ்பி ஜனநாதன் தனது வாழ்க்கையில் மிஸ் செய்த ஒரே படம் இதுதான் என்று பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது எஸ்பி ஜனநாதன் பிரபல யூட்யூப் சேனலில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டாராம். அப்போது பேசிய ஜனநாதன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராஜராஜ சோழனின் வரலாற்றை படமாக இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவர் இறந்ததால் தற்போது வரை இந்த படம் வெறும் கனவாகவே போய் விட்டது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த சேனலுக்கு ‘நாங்கள் அந்த படத்தின் தயாரிப்பு செலவிற்கு ஆகும் பணத்தை தருகிறோம்’ என்று தெரிவித்தனராம். இதனை அதே சேனலில் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே எஸ்பி ஜனநாதன் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.