விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். என்னதான் இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.
மேலும் அனிதா பைனல்ஸ் வரை செல்வார் என்று பலர் எதிர்பார்க்க, அழுவது, சண்டை போடுவது என பல ட்ராமாகளை செய்து அவற்றை எல்லாம் பொய் ஆக்கினார் அனிதா. அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு இளைஞனை திட்டுவது போல் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதையும், தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் அண்மையில் இளைஞர் ஒருவர் அனிதா சம்பத்திற்கு மோசமாக மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் படுபயங்கரமாக அனிதா சம்பத்தை திட்டியுள்ளார் அந்த இளைஞர்.
இதனால் கோபம் அடைந்த அனிதா அந்த இளைஞரின் புகைப்படத்தை ஷேர் செய்து, பெண்களே இவனை சந்தித்தால் கவனமாக இருங்கள் என்றும், வருங்கால ரேபிஸ்ட் என்றும் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், நீ டைப் செய்ததை முடிந்தால் உங்க அம்மா கிட்ட காட்டு. அவங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் அனிதா.
எனவே அனிதா சம்பத்தின் இந்தப் பதிவும், அந்த இளைஞனின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.