தனுஷுடன் நடித்த ஒரே படம்.. அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அமுல் பேபி நடிகை

சினிமா துறையில் உள்ள நடிகைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்துறையை விட்டு விலகுவது உண்டு. அதிலும் குறிப்பாக  திருமணத்துக்குப் பிறகு சினிமா வாழ்க்கையை தொடரும் நடிகைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவுதான்.

அந்த வகையில் தற்போது தனுஷ் படத்தின் நடிகைக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகவும், இதனால் இனி படங்களில் நடிக்க வாய்ப்பில்லை எனவும் அந்த நடிகைக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மெஹரின். இந்தப் படத்தில் கிடைத்த வெற்றியையும், வரவேற்பையும் தொடர்ந்து மெஹரின், விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ மற்றும் தனுஷின் ‘பட்டாசு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மெஹரின் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும்  நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் மெஹ்ரீனுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆம் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி  பஜன்லால் இன் பேரனான பவ்யா பிஷ்னோயை மெஹரின் மணக்க உள்ளாராம்.

இதனை அறிந்த மெஹரின் ரசிகர்கள் ‘திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என  சமூக ஊடகங்களின் வாயிலாக கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஏனென்றால் இது பற்றி மெஹ்ரீனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, திருமணத்திற்கு பிறகு மெஹரின் கணவருடன் டெல்லியில் செட்டிலாக இருப்பதாகவும், சினிமாவை விட்டு முழுவதும் ஒதுங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்தது.

இதனால்தான் சமீபகாலமாக மெஹரின் எந்த ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அதேபோல் தற்போது மெஹரின் வருண் தேஜாவுடன் நடிக்கும் தெலுங்கு படம் தான் அவரது கடைசி படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Mehreen
Mehreen

எனவே, மெஹரின் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவலை அறிந்த மெஹரினின் ரசிகர்கள் சோகக் கடலில் மூழ்கி உள்ளனர். தனுசுடன் நடித்து முடித்த பின்னர் அதன் பின் தமிழ் சினிமாவிற்கு எப்பயோ டாட்டா காமிச்சி விட்டாராம்.