விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கதிர் மற்றும் முல்லை என்ற ஜோடி மிகப் பிரபலம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் புதிதாக திருமணமானவர்கள் முல்லை-கதிர் ஜோடி ரொமான்ஸ் பண்ண முடியாமல் தவிக்கும் காட்சிகள் செம ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் முல்லை என்கிற சித்ராவுக்கு நடிகர் கதிர் முத்தம் கொடுப்பது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக திருமணமான முல்லை குடும்பத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம்.
அதேசமயம் சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் என பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நீங்க எதிர்பாக்கல ல.. நாங்களும் எதிர்பாக்கல!
பாண்டியன் ஸ்டோர்ஸ் – இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/i4VNrl3BQy
— Vijay Television (@vijaytelevision) November 6, 2020
அதன்பின் சித்ராவின் மரணத்திற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமதி கதாபாத்திரத்தில் நடித்த காவியாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் அச்சு அசல் முல்லையாகவே மாறிய காவியா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த முறை கதிர் முல்லைக்கு முத்தம் கொடுக்காமல், முல்லை தான் கதிருக்கு முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த காட்சியை பார்க்கும் சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டம் போடுகின்றனர்.