ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இயக்குனர்கள் அனைவருமே தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஓட்டம் பிடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பவர் தான் நம்ம பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான்.
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 2.O. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைகா தயாரிப்பில் இந்தியன் 2 எனும் படத்தை இயக்கி வந்தார்.
ஆனால் அந்த படமும் பாதியில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. படத்தின் ஹீரோவான கமலஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இந்தியன் 2 படத்தைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் சங்கருக்கும் விபத்தின் போது சில கருத்து வேறுபாடு நிகழ்ந்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
போதுமடா சாமி என தற்போது சங்கர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். மேலும் அந்த படம் லேட் ஆவதால் அதற்கு முன்னரே இந்தியில் பிரபல நடிகராக இருக்கும் ரன்வீர் சிங் என்பவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

புதிதாக கதை எழுதினால் வேலைக்காகாது என 15 வருடத்திற்கு முன்னால் 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தின் கதையை ரன்வீர் சிங்கிடம் சொல்லி ஓகே செய்துள்ளாராம். இதன் மூலம் நீண்ட நாட்கள் கழித்து அந்நியன் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்ததால் சங்கருக்கு புதிதாக யோசிக்க நேரம் இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். எப்போதுமே ஷங்கர் படங்களில் ஏதாவது புதுமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதுண்டு. அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் தானே!