ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

அரசு வேலையைத் தூக்கி எறிந்த வினுசக்கரவர்த்தி.. ஒன்னு இல்லங்க 2 வேலை எது தெரியுமா?

அன்றைய காலத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ் போன்ற  நடிகர்களின் வெற்றி படங்களுக்கு வித்திட்டவர் வினுசக்கரவர்த்தி.

வினுசக்கரவர்த்தி கிராமத்துப் பெரியவர், நாட்டாமை, தலைவர், காவல் அதிகாரி என இவர் ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரமே இல்லை என்று கூட கூறலாம். சினிமாவில் இவர் வெற்றி அடைவதற்கு இவருடைய மேனரிசம் தான் ஒரு முக்கிய காரணம்.

இவர் ஒருமுறை நாடகத்தில் எமதர்ம வேஷம் போட்டு நடித்துள்ளார். அதை பார்த்த சென்னையில் டிஜிபியாக இருந்த அருள் என்பவர் உன் நடிப்பு அருமையாக உள்ளது. உன் உருவமும் போலீஸ்க்கு வேலைக்கு ஏற்றது போல் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதனால் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டிஜிபி அருள் சந்தித்து அவருடைய அறிவுரையின் பேரில் உதவி ஆய்வாளராக தேர்வானார். பின்பு வேலூரில் போலீஸ் பயிற்சியை முடித்துவிட்டு சென்னையில் லைட் ஹவுசில் உதவி ஆய்வாளராக 6 மாதம் பணியாற்றியுள்ளார்.

சினிமாவில் ஆர்வம் இருந்ததாலும், போலீஸ் வேலை பிடிக்காமல் போனதாலும் போலீஸ் வேலையை விட்டார். பின்பு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ரயில்வே துறையில் துணை ஆய்வாளராக சேர்ந்துள்ளார்.

vinu-chakaravarthy-1
vinu-chakaravarthy-1

அப்போது ரயிலில் பயணம் செய்த கன்னட இயக்குனரான புட்டண்ணா கனகல் என்பவர் இவரை பார்த்து மீண்டும் சினிமா பாதைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பு மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென சினிமாவில் ஒரு இடம் பிடித்தார்.

- Advertisement -spot_img

Trending News