தொலைக்காட்சிகளில் சீரியல்கள் போன்றே வாரக்கடைசியில் ரியாலிட்டி ஷோக்களை மக்கள் பெரிதும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி நிறுவனம் வாராவாரம் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமான பல ஷோக்கள் உள்ளனர். அதில் பிக்பாஸ் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஹிந்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்த விஜய் டிவி நிறுவனம் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த சீசனில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடத்த தீவிரமாக வேலை செய்து வருகிறார்களாம் விஜய் டிவியினர்.
அந்த வகையில் போட்டியாளர்களும் இளமையாக ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் இருக்குமாறு தேர்வு செய்யவுள்ளனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் சிலரையும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அதனுடன் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நடிகர் நகுலிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இருந்தாலும் யோசித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளாராம். இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு சில நடிகர் மற்றும் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது விஜய் டிவி நிறுவனம். இந்த முறை நெகட்டிவ் மற்றும் பாசிடிவ் விமர்சனங்கள் கொண்டவர்களை சரிசமமாக களமிறக்கி விட உள்ளார்களாம்.