தளபதி விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் நடிகர் ஒருவருக்கு விஜய் மாதிரி மாற்றி காட்டுகிறேன் என ஆசை காட்டி ஏமாத்திய செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.
விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் அவரது படங்களை இயக்கி அவருடைய வளர்ச்சிக்கு ஆணி வேராக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். விஜய்க்கு மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் புரட்சிகரமான படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் நீண்ட நாட்கள் கழித்து படம் இயக்க ஆசைப்பட்ட எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கேப்மாரி திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதன் காரணமாக அடுத்தது ஒரு நல்ல படத்தை இயக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
அதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் என்பவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக அவருக்கு உறுதி கொடுத்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் எல்லாம் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் ஊரடங்குக்கு பிறகு அந்த படத்தை பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வெங்கட்டிடம், எஸ் ஏ சந்திரசேகர் படம் என்ன ஆனது? என கேட்டுள்ளார்.

ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னால் பரபரப்பாக இருந்த அந்த படம் அதன்பிறகு பேச்சு மூச்சு இல்லாமல் கிடைக்கிறது எனவும், விரைவில் நல்லது நடக்கும் எனவும் சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவதை பார்க்கையில் படத்தை ஊற்றி மூடி விட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிந்தது. இதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.