குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாமிலி. இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்துள்ளார்
முக்கியமாக 1990-இல் அஞ்சலி என்ற படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து நேஷனல் பிலிம் விருதுகளை தட்டிச் சென்றார்.
அதற்குப் பின்னர் துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் பேபி சாமிலி.
அதற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை 2000-தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்து இருப்பார், அதுதான் அவர் நடித்த கடைசிப்படம்.
நடிப்பு வரவில்லை என்று அவரே முடிவு செய்துவிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் தற்போது முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சொக்க வைக்கும் சொப்பன சுந்தரியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![baby-shamili-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/babay-shamili-cinemapettai.jpg)
இவர் புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி கதாநாயகியாக களமிறங்குவார் என்று தெரிகிறது. ஏற்கனவே வீரசிவாஜி என்ற படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.