சமீபகாலமாக தெலுங்கு நடிகரின் படங்கள் அனைத்துமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களின் படங்கள் நல்ல வசூல் செய்து வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அளவைகுந்தபுறமுளோ படத்தின் தமிழ் டப்பிங்கை வைகுண்டபுரம் என்ற பெயரில் சன் டிவியில் ஒளிபரப்பினர். யாரும் எதிர்பார்க்காத வகையில் அல்லு அர்ஜுன் படம் ஏகப்பட்ட டிஆர்பியை அள்ளிக் குவித்தது.
அதனை தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். முதலில் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக புஷ்பா படக்குழுவினர் விஜய் சேதுபதியை விட இன்னும் மாஸான நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என கருதியுள்ளனர்.
தற்போது அவர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவராகவும் வலம் வரும் பகத் பாசில் அந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த தகவலை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர். மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக முதன் முதலாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.