பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் கங்கனா ரனாவத் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்துள்ள திரைப்படம் தான் தலைவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை தலைவா, கிரீடம் போன்ற படங்களை இயக்கிய விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்கூட கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள கதாபாத்திரத்தில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விரைவில் தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாம்.
இந்நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரனாவத் அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்திற்காக 20 கிலோ உடல் எடையை ஏற்றி இறக்கி நடித்துள்ளாராம்.
மேலும் மேக்கப்புக்காக மட்டும் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் செலவு செய்தாராம். இதனாலேயே தலைவி படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் உள்ள பலரையும் பகைத்துக்கொண்டுள்ள கங்கனா ரனாவத், நான் தான் உலகிலேயே மிகப்பெரிய நடிகை என பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், தலைவி படம் வெளியானால் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.