புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மறக்க நினைச்சாலும் முடியல.. இதுக்கெல்லாம் காரணம் அஜித்தான்.. முதல் படத்திலேயே ஹிட் அடித்த நடிகர் பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தல அஜித். இவர் தனது சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்விகளை சரிசமமாய் பார்த்து தற்போது யாரும் அசைக்க முடியாத அளவிற்கு தன்னிகரற்ற நடிகராக உயர்ந்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் தல அஜித்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் என பலவற்றில் ஆர்வம் காட்டி, பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வலிமை’ படத்திற்காக இவரது ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தின் உயரிய குணங்களை பற்றி பிரபல நடிகரான கஞ்சாகருப்பு பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, அஜித் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதாவது தல அஜித்தும், கஞ்சா கருப்பும் ‘திருப்பதி’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அப்போது தல அஜித் கஞ்சா கருப்பிடம் சகஜமாக பழகியதாக கஞ்சா கருப்பு பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் அஜித் வரும் போது கஞ்சாகருப்பு எழுந்து நின்றால், ‘எதற்கு நிற்கிறீர்கள்? உட்காருங்கள், நானும் மனுஷன்தானப்பா’ என்று தல கேட்பாராம். அதுமட்டுமில்லாமல், அஜித் கஞ்சாகருப்புகாக கேரவனிலேயே சமைத்துக் கொண்டு வந்து தருவாராம். அதெல்லாம் மறக்கவே முடியாதாம். இதனால்தான் அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று கஞ்சா கருப்பு அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

எனவே தல அஜித் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருவதோடு, அவரது இந்த உயரிய குணங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Trending News