மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வந்தது சமீபத்தில் வெளியான எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு தான். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த லாபம் இல்லை என்ற கருத்து கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக உள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் அவ்வளவு எளிதில் நம்பும் வகையில் இல்லை. சமீபகாலமாக செல்வராகவன் படங்கள் அனைத்துமே செயற்கையான நடிப்பில் உருவாகி வருவது போல தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க செல்வராகவன் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை முதன்முதலில் நடிகர் தனுஷுக்கு எழுதியது தானாம். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு தனுஷூக்கு இரண்டு கதைகள் எழுதியுள்ளார் செல்வராகவன்.
அதில் ஒன்று இரண்டாம் உலகம். முதலில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கொஞ்ச நாள் வேறு ஒரு பெயரில் உருவான அந்த திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தனுஷுக்கு எழுதிய இன்னொரு கதையை தான் நெஞ்சம் மறப்பதில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து பேய் படங்கள் வெற்றி பெற்று வந்ததால் செல்வராகவனும் பேய் படம் எடுக்க ஆசைப்பட்டு நான்கு வருடத்திற்கு முன்னரே உருவாக்கி வைக்கப்பட்ட திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. நல்ல வேளை இந்த படம் அப்போது வெளிவந்திருந்தால் முதல் காட்சியை தாண்டி இருக்குமா என்பது சந்தேகம்தான்.
செல்வா சார், எப்ப சார் நல்ல படம் கொடுப்பீங்க!