தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை பற்றிய சில 10 சுவாரசியமான சம்பவங்களை தற்போது பார்க்கலாம்.
ஒன்று: ஏற்கனவே தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் வெற்றிகண்ட இயக்குனர் 4வது முறையாக அசுரன் படத்தில் இணைந்து தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளனர். வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தால் தனுஷ் கதை கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்து விடுவாராம்.
இரண்டு: அசுரன் படத்தின் டப்பிங்கின் போது வெற்றிமாறன் உடல்நலக்குறைவால் அதனை தொடராமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் சுகாவும் தான், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முடித்து உள்ளனர்.
மூன்று: இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஜிவி பிரகாஷ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்த படத்துடன் ஜிவி பிரகாஷ் நடித்த ‘100% காதல்’ படமும் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
நான்கு: சில நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பசுபதி வெற்றிமாறனுக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஐந்து: திரையரங்கு வசூல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமம் என்று அசுரன் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. இதுதான் முதல் முறையாக தனுஷ் நடித்து அதிக வசூல் பெற்ற படமாக பேசப்பட்டது. ஆனால் அவர் நடிப்பில் ராஞ்சனா என்ற இந்தி படம் ஏற்கனவே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

ஆறு: இன்னமும் தலித் மக்கள் எவ்வளவு அவதிப் படுகிறார்கள் என்பதை மிகத் தத்ரூபமாக கதாநாயகனை வைத்து அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டது. இதற்கு பல அரசியல் ரீதியான மிரட்டல்களையும் சந்தித்தார் வெற்றிமாறன்.
ஏழு: அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்த கென்னின் தந்தை மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் இந்த படத்தை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு: பூமணியின் வெக்கை என்ற நாவல் தான் அசுரன் படம் உருவானதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஆனால் இதில் வரும் சிறுவனை மட்டும் மையப்படுத்தி எப்படி நகரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து உள்ளதாம். ஆனால் அதையே வெற்றிமாறன் சிவசாமியை பிரதிபலிக்கும் விதமாக அவரது பாணியில் மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார்.
ஒன்பது: இந்த படத்தில் வரும் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் விவசாயின் போராளியான சீனிவாசராவ் நினைவு படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
பத்து: தலித் நாயகன் சிவசாமியின் கதாபாத்திரத்தை பற்றி பல ஆங்கில ஊடகங்களும் கட்டுரையாக வெளியிட்டு பிரபல படுத்தினர்.
இது வரை வெற்றிமாறன் எடுத்த படங்களில் குறைந்த நாட்களில் உருவாகிய படம் அசுரன். வெற்றிமாறன் இந்த அளவிற்கு உச்சத்தில் நிற்பதற்கு நாவல்களை தழுவிய கதைகளை தேர்ந்தெடுப்பது தானாம். விசாரணை படம் லாக்கப் என்ற நாவலை தழுவியது, அடுத்தபடியாக அசுரன் உருவானது, அது போக அடுத்து இயக்கவிருக்கும் படமும் செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவியது தான்.