தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியான பிறகு அந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை தவிர மற்ற யாருக்கும் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் மாஸ்டர் படத்தின் புரமோஷனுக்காக ஒரு சீன் நடித்த நடிகர்கள் எல்லாம் வளைத்து வளைத்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிலும் சாந்தனு எல்லாம் பாவம். பார்கவ் என்ற கதாபாத்திரத்தை தற்போது வரை இணையத்தில் வச்சு செய்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்பட்டவர் தான் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு. தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் தற்போது வரை நான் ஒரு ஹீரோ என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் தீவிர ரசிகர். இதன் காரணமாகவே மாஸ்டர் படத்தில் முக்கியத்துவம் இல்லாத ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதுவே அவருக்கு தற்போது வினையாக மாறியுள்ளது.
சாந்தனு மாஸ்டர் படத்தில் வந்த நேரத்தைவிட யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தது தான் அதிகம். இதனாலேயே தற்போது ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
மாஸ்டர் படத்தில் சிறந்த கேரக்டரில் நடிப்பதற்காக சாந்தனுவுக்கு தேசிய விருது கிடைத்ததாக ஒரு மீம்ஸ் போட்டு சாந்தனு மனதை நோகடித்து விட்டார்கள் போல. மிகவும் வருத்தப்பட்டு அந்த மீம்சை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மனம் நொந்து பேசியுள்ளார். மேலும் ஒரு நாள் நானும் தேசிய விருது வாங்குவேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.