வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரு கோடி ரூபாய்க்கு BMW கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.. இத்தனைக்கும் இவர் 9வது பெயில்!

விஜய் டிவியில் பிரமாண்ட ரியாலிடி ஷோவாக சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியிலிருந்து வருங்காலத்தில் பல பிரபலங்கள் சினிமாவில் பெரியாளாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த அளவுக்கு திறமை சாலிகள் நிறைய பேர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சமையல் நிகழ்ச்சி தான் என்றாலும் அதில் பிரதானமாக பார்க்கப்படுவது அவர்கள் செய்யும் சேட்டைகள் தான்.

அதிலிருந்து தற்போது புகழ், சிவாங்கி போன்றோர் சினிமாவில் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் புகழ் தற்போது விஜய் சேதுபதியுடன் முக்கிய காமெடியனாக பொன்ராம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் மட்டும் இல்லாமல் ஏற்கனவே அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் என்ன சேட்டை செய்தாலும் அதை விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும் போட்டியின் நடுவர்கள்கூட ரசிகர்களின் பேவரைட் தான்.

அதிலும் குறிப்பாக வெங்கடேஷ் பட், செப் தாமு போன்றோர் போட்டியாளர்களுடன் சேர்ந்து இவர்களும் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதால்தான் இன்று அதிக டிஆர்பி பெறும் நிகழ்ச்சியாக வளர்ந்துள்ளது.

venkatesh-bhatt
venkatesh-bhatt

விஜய் டிவியில் ஆரம்பத்திலிருந்தே சமையல் நிகழ்ச்சி என்றால் வெங்கடேஷ் பட் தான் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். இத்தனைக்கும் அவர் 9-வதில் பெயிலானவர். திறமைக்கும் படிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிரூபித்தவர்களில் முக்கியமானவராக மாறியுள்ளார் வெங்கடேஷ் பட்.

cookwithcomali-venkateshbhatt-bought-BMW-car
cookwithcomali-venkateshbhatt-bought-BMW-car

வாழ்த்துக்கள் சார்!

- Advertisement -

Trending News