புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

37 வயதாகியும் நடிகை சதா கல்யாணம் பண்ணாமல் இருக்க காரணம் இதுதானாம்.. இப்படியே சொன்னா எப்படி மேடம்!

அண்டங்காக்கா கொண்டைக்காரி ரண்டக்க ரண்டக்க என இளம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சதா தற்போது 37 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்க காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல விருதுகளை வென்றார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது வரை சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னர் இருந்தது போல் மார்க்கெட் இல்லை. கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

sadha-cinemapettai
sadha-cinemapettai

வழக்கமாக மார்க்கெட் இல்லாத போது நடிகைகள் தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் சதா, தற்போது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை எனவும் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

சதாவின் சினிமா மார்க்கெட் தலைகீழாக மாறியதற்கு வடிவேலுவுடன் நடித்த எலி படம் தான் காரணம் என தற்போது வரை சமூக வலைதளங்களில் ஒரு செய்தி விவாதப்பொருளாக சென்று கொண்டிருக்கிறது.

Trending News