சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இந்திய அளவில் புகழ் பெற்றவர் தான் பாக்கியராஜ். அப்பேர்ப்பட்ட பாக்கியராஜ் தன்னுடைய மகன் சாந்தனுவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்த ரொம்ப காலமாக போராடி வருகிறார்.
சாந்தனுவை வைத்து பாக்கியராஜ் எடுத்த படங்களும் சரியாக ரசிகர்களை சென்றடையவில்லை. மேலும் சாந்தனு நடிக்கவிருந்த பல படங்களில் பாக்யராஜ் தலையிட்டு இந்தமாறி படங்களில் நடித்தால் என்னுடைய மகன் பெரிய ஆளாக வர மாட்டான் என கூறி நிராகரித்து விட்டதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு மீடியா பாக்கியராஜால் சாந்தனு இழந்த வெற்றிப்படங்கள் என பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம், களவாணி என்ற நான்கு படங்களை குறிப்பிட்ட செய்தியை உருவாக்கியிருந்தனர்.
இது எதேச்சையாக சாந்தனு கண்ணில்பட தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதைப் பகிர்ந்து, இது தவறான தகவல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படங்களை மிஸ் செய்தது உண்மைதான் எனவும், ஆனால் அதை என் தந்தையால் தான் மிஸ் செய்தேன் என்ற கருத்து தவறாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்புதான் மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்தவர்கள் கதாபாத்திரத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ததாக மீம்ஸ் உருவாக்கி ரசிகர்கள் கிண்டலடித்த நிலையில் அடுத்த சில தினங்களிலேயே இப்படி நடந்துள்ளது சாந்தனு மனதளவில் மிகவும் பாதித்து விட்டது போல.
தொடர்ந்து தன்னைப் பற்றி தவறான செய்திகளை பார்ப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி எப்படி சம்பந்தமே இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மாட்டி சிக்கி தவித்தாரோ அதே தான் தற்போது சாந்தனுவுக்கும் நடைபெற்று வருகிறது.