சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அதிமுக இத்தனை இடங்களில் வெற்றி பெறுமா? புதுயுகம் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பு முடிவு!

தமிழக  சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிக்கை  நிறுவனங்களும் யார் முதல்வராவார் இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதுயுகம் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

அதாவது சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று புதுயுகம் டிவி தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளின்  வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5 சதவீத வாக்குகளை பெறும் என்றும், திமுக 38.5 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளை பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும், திமுக கூட்டணி 45 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

admk-voting
admk-voting

ஆனால் பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணி 42.8 சதவீதம் வாக்குகளும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் மாநில அளவில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெறும் என்று புதுயுகம் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல் திமுக கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர். தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி 102 இடங்களிலும், மற்ற கட்சிகள் ஓரிடத்திலும் வெற்றி பெறும் என்பது புதிய நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவாகும்.

இதன் மூலம் பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Trending News