இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இதுவரை எடுத்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற 5 படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளதாம் இந்த படத்தின் படப்பிடிப்புகள்.
இது ஒருபுறமிருக்க அடுத்ததாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் குறுகிய கால கட்டங்களில் ஒரு படம் உருவாக உள்ளது. இதற்கான கதைக்களம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படமும் வெயிட்டிங்கில் உள்ளது.
இதற்கிடையில் வெற்றிமாறன் நடிகவேள் எம் ஆர் ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தை ரீமேக் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ரத்தக்கண்ணீர் படத்தில் எவ்வளவு புரட்சிகரமான வசனங்கள் இருந்தது.
அதுவும் இந்த காலகட்டங்களில் அந்த மாதிரி அரசியல் வசனங்களை வைத்தால் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பஞ்சாயத்து வரும். அதெல்லாம் வராமல் இருக்க எந்த ஹீரோ சரியாக இருப்பார் என யோசிக்கிறாராம் வெற்றிமாறன்.
சமீபகாலமாக அரசியல் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கும் நடிகர் விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வருங்காலத்தில் அமைய உள்ளது. ஒருவேளை அந்த படம் ரத்தக்கண்ணீர் ரீமேக்காக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் தற்போது உள்ள நடிகர்களில் ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்கும் அளவுக்கு திறமை உள்ள நடிகர் யார் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.
