சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

44% வாக்குகளைப் பெற்று 131 தொகுதிகளை கைப்பற்றும் அதிமுக.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று 131 தொகுதிகளை கைப்பற்றும் என்று புதுயுகம் நடத்திய கருத்துக் கணிப்புகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி உள்ளது.

ஏனென்றால் 5 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்து ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிமிருந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் வெளியான முடிவில்,

மேற்கு மண்டலத்தில், அதிமுக கூட்டணி 46.5 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது அதைத் தொடர்ந்து திமுக 38.5 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதைப்போல் சென்னை மண்டலத்தில், அதிமுக கூட்டணி 39% பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45% வாக்குகள் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

poll-result1

அதை போல் டெல்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்றும், வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும் என்றும் திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

poll-result
poll-result

மேலும் தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருத்துக்கணிப்பின் மூலம் வெளியாகியுள்ளது.

எனவே மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்றும், திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள்  திருப்தி அளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News