சைக்கிளில் ஜாலியாக வந்து ஓட்டு போட்ட தளபதி விஜய்.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மக்களும் காலை முதலே தங்களுடைய வாக்குச்சாவடிகளில் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த முறை அனைத்து நடிகர் நடிகைகளும் பெரும்பாலும் அதிகாலையிலேயே ஓட்டு போடுவதற்கு வந்துவிட்டனர். சூர்யா, அஜித், ஷாலினி, கார்த்தி, சிவகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஜீவா, சிவகார்த்திகேயன் போன்றோர் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்தனர்.

அனைத்து முன்னணி நடிகர்களும் காலையிலேயே வந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தளபதியை தான். எந்த மாதிரி வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காலையிலிருந்தே இணையதளத்தில் வெயிட் செய்து கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் சர்ப்ரைஸ் செய்யும்விதமாக தளபதி விஜய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த புகைப்படம் தான் தற்போதைக்கு இணையத்தில் ஹாட் டாபிக். காலையில் சைக்கிளிங் செல்வதை போல ஜாலியாக வைத்துள்ளார் தளபதி விஜய்.

vijay-voting-election2021
vijay-voting-election2021

கடந்த முறை தளபதி விஜய் நீண்ட நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட்டு சென்றார் என்பதையே மக்கள் மத்தியில் இன்றும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் அநியாயத்திற்கு சிம்பிளாக சைக்கிளில் வந்துள்ளது இன்னும் எத்தனை வருடத்திற்கு பேசப்படுமோ.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் தற்போது சைக்கிள் என்ற பெயரில் இணையத்தில் செய்து வருகின்றனர். தளபதி விஜய் இப்படி வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தளபதி வேற லெவல்!

vijay-bicyle-ride-for-voting
vijay-bicyle-ride-for-voting