எப்போதுமே தல அஜித் தேர்தலின்போது அதிகாலையிலேயே வந்து முதல் ஆளாக ஓட்டு போட்டு விடுவார். அந்த வகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுபோட அஜித் ஏழு மணிக்கு முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தார்.
எப்போதுமே பெரிய நடிகர்கள் இதுபோன்ற பொது இடத்திற்கு வரும்போது ரசிகர்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே முடிந்தவரை நேரமாகவே வந்து சென்று விடுவார்கள்.
அந்த வகையில் தல அஜீத்தும் சீக்கிரம் ஓட்டு போட்டுவிட்டு சென்று விடலாம் என்று எண்ணி நேரமாக வந்துள்ளார். இதைப் பார்த்த ஒரு ரசிகர் இன்னொரு ரசிகருக்கு சொல்ல அந்த இடத்தில் திடீரென ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர்.
இதனால் அதிர்ந்து போன தல அஜித் போலீஸாரின் உதவியால் ஓட்டுச் சாவடிக்குள் நுழைந்தார். அப்போது ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் டென்ஷனான தல அஜித் அதில் ஒரு ரசிகரின் செல்போனை வெடுக்கென பிடிங்கி விட்டார்.
இந்த வீடியோதான் காலையிலிருந்து இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தல அஜித் பொது இடத்தில் இவ்வளவு கோபமாக நடந்து கொள்கிறாரே என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயத்தை அரைகுறையாக தெரிந்து கொண்ட ரசிகர்கள் சிலர் உடனடியாக அஜித்தை கேவலப்படுத்தும் நோக்கத்தில் அந்த வீடியோவை பரப்பி வந்தனர்.
ஆனால் அதன்பிறகு தல அஜித் செய்தது யாருக்கும் தெரியவில்லை. எந்த ரசிகரிடமிருந்து செல்போனை பிடுங்கினாரோ அதே ரசிகரை அழைத்து மாஸ் போடு என்று சொல்லி செல்போனை திரும்பக் கொடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![ajith warned and returned his fan mobie](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/ajith-warn-and-return-his-fan-mobie.jpg)