தர்பார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் பல நாட்களாக நடித்து வருகிறார்.
முதலில் பரபரப்பாக தொடங்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் பின்னர் பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு உள்ளானது. முதலில் குரானா பிரச்சினையால் படப்பிடிப்பு மொத்தமும் கைவிட வேண்டிய சூழ்நிலை.
பிறகு அதிலிருந்து மீண்டு படத்தை தொடங்கலாம் என ஹைதராபாத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த போது எதிர்பாராமல் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போதாக்குறைக்கு இடையில் ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து வேறு பல வகையில் அவரை மிரட்டி எடுத்தது. தற்போது ஒரு வழியாக எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு மீண்டும் அண்ணாத்த படத்திற்கு கிளம்பி விட்டார் ரஜினி.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சென்னையில் நடந்த படப்பிடிப்பு தற்போது வழக்கம்போல் மாற்றப்பட்டு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் தற்போது தனி விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக ஹைதராபாத் படப்பிடிப்பில்தான் அண்ணாத்த படக்குழுவினர் சிலருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கவனமாக இருக்கிறோம் என சன் பிக்சர்ஸ் வாக்குறுதி கொடுத்த நிலையில் மீண்டும் கோதாவில் குதித்துள்ளார் அண்ணாத்த ரஜினிகாந்த். இந்த முறையாவது படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
