கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் மழை பொழியும் என கனவு கண்டுகொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு தலையில் துண்டை போடும் செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் மற்றும் சுல்தான் ஆகிய படங்களுக்கு பிறகு மிகப்பெரிய படமாக வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தியேட்டர்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவுமில்லாமல் கர்ணன் படத்தின் முன் பதிவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
அசுரன் படத்தை விட இரண்டு மடங்கு முன்பதிவு அதிகரித்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளரும் ஏக குஷியில் இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் கொரானா பரவல் அதிகமாகியுள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இது ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. ஆனால் கர்ணன் படம் ஒன்பதாம் தேதி வெளியாவதால் முதல் நாள் மட்டுமே நல்ல வசூல் செய்யும் எனவும், அதன்பிறகு வசூல் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் தயாரிப்பாளரோ கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல மாஸ்டர் படத்தைப் போல கர்ணன் படமும் 50 சதவீத பார்வையாளர்கள் கொண்டு மிகப்பெரிய வசூல் பெற்று சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் படக்குழுவினருக்கு திடீரென 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கப்பட்டது வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் கர்ணன் இன்னொரு மாஸ்டராக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
![karnan-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/karnan-cinemapettai.jpg)