கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் தற்போது த கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதனைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் என்ற படம் தொடங்க உள்ளது. அதே சமயத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் பட ஸ்டைலில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
பகத் பாசில் நடிப்பில் கடந்த வருடம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சீ யூ சூன். இந்த படம் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதே போல் தனுஷ் நடிக்கும் அடுத்த படமும் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தை தனுஷுக்கு மாரி படங்களைக் கொடுத்த பாலாஜி மோகன் இயக்கவுள்ளாராம்.

பகத் பாசில் நடித்த சீ யூ சூன் திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது. ஆனால் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்தப் படம் தியேட்டரில் வெளியாக உள்ளதாம். ஐ-போனில் எடுக்கும் படம் தியேட்டரில் வெளியானால் எப்படி இருக்கும் என்பதே தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
குறுகிய நாட்கள் மட்டுமே கால்சீட் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு தன்னுடைய அடுத்தடுத்த பெரிய படங்களில் கவனம் செலுத்த உள்ளார் தனுஷ்.