தற்போதெல்லாம் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையில் கால் பதிப்பது ஒன்றும் புதிதல்ல. அதில் பெரும் பங்கு வகிப்பது விஜய் டிவிதான். ஏனென்றால் விஜய் டிவியில் பணிபுரிந்த பல சின்னத்திரை நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் வேற லெவலில் தங்களது திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு ஏன் தற்போது கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ், சிவாங்கி, அஸ்வின், பாலா, பவித்ர லட்சுமி போன்றோருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான காவியா வெள்ளித்திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு இணையான ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் VJ சித்ரா நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அந்த கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காவியா நடிக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் சீரியல் உள்ள அனைவருக்கும் இருந்தது. ஆனால் தனது திறமையான நடிப்பால் காவியா அந்த தயக்கத்தை உடைத்து காட்டினார்.
தற்போது காவியா அறிவுமணி, பரத்-வாணி போஜன் இணைந்து நடிக்கும் படமொன்றில் ஹீரோயினுக்கு இணையான ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்தப்படம் காவியா அறிவுமணியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் பூஜை முடித்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த தகவலை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதோடு, காவியாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.