விவேக்(vivek) சமீபத்தில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனங்களின் கலைஞன் என அன்போடு அழைக்கப்படுபவர் விவேக். தன்னுடைய காமெடிகளில் சமூக கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைப்பதில் கில்லாடி.
மக்களை சந்தோசமாக சிரிக்க வைத்த விவேக்கிற்கு அவரது வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசம் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விவேக் மகன் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் கவனம் செலுத்தி வந்த விவேக் சமீபத்தில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் கொரானா வரும் எனவும், ஆனால் அந்த கொரானா உயிரை கொள்ளாமல் இருக்க இந்த மருந்து உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இந்த மாரடைப்பு வந்ததா? எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டாவது நாளே இப்படி ஒரு பிரச்சனை விவேக்குக்கு ஏற்பட்டுள்ளது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. தற்போது மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் விவேக் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.